மிக்கி மவுஸ் போல மாற்ற நாய், பூனைகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் கார்ட்டூன் பிரியர்கள்.! இது எங்க போயி முடியப்போகுதோ.!! 



people expense money for cat and doggy plastic surgery

 

சமீப காலமாகவே பலருக்கும் கார்ட்டூன் மற்றும் அனிமி மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கை, கால்களில் அனிமி, கார்ட்டூன் புகைப்படங்களை டாட்டூவாக குத்திக் கொள்வது, வீடு முழுவதும் கார்ட்டூன் பொம்மைகளை நிறைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். 

மேலும் சிலர் தங்களை அந்த கார்ட்டூன் கதாபாத்திரம் போலவே மாற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கு தற்போது வரை வாய்பில்லாததால் அமைதியாய் இருக்கின்றனர். இந்நிலையில் சீனாவில் டிஸ்னியின் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் போல தங்களது நாய், பூனைகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் செயல் அதிகரித்து வருகிறது. 

china

தங்களது வளர்ப்பு பிராணிகளின் வாலை நறுக்குவது, காதுகளை நிமிர்த்துவது மற்றும் ரோமங்களை நீக்குவது போன்றவற்றிற்காக 300 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.3623 ரூபாய்) வரை செலவிடுகின்றனர். இதனால் "வளர்ப்பு பிராணிகளை வதைக்கும் இது போன்ற முடிவுகளை தவிர்க்க வேண்டும்" என விலங்குகள் நல ஆர்வலர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.