Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
ஜெயிலில் உயர் அதிகாரியின் சாப்பாட்டை திருடியதாக நாய் மீது புகார்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஜெயிலில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர் சம்பவ தினத்தன்று மதியம் வழக்கம் போல் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்த மதிய உணவை தனது அறையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது போலீஸ் நாய் ஒன்று அவரின் அறைக்கு வெளியே நின்றுள்ளது.
இந்நிலையில் அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே மற்றொரு அதிகாரி ஒருவர் அவரிடம் உதவி கேட்டு வந்துள்ளார். அதற்காக அதிகாரி தான் சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு அவருக்கு உதவி செய்ய சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது சாப்பாட்டு டப்பா காலியாகி இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரி தான் அறைக்கு வெளியே நின்ற போலீஸ் நாய் தான் தனது சாப்பாட்டை சாப்பிட்டிருக்க வேண்டும் என கூறி உடனே விசாரணை நடத்த வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.