பூமியை நெருங்கும் கருந்துளை: சூரியனை விட 10 மடங்கு பெரியதாக உள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம்..!



Scientists fear that the black hole approaching the Earth is 10 times bigger than the Sun

பால்வெளி மண்டலத்தில் பூமிக்கு மிக அருகில் சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை ஒன்று நெருங்கி வந்துள்ளது.

நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் நட்சத்திரங்கள், விண்மீன்கள், விண்கற்கள் என வியக்கவைக்கும் பல விஷயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் கருந்துளையும் ஒன்று. இவற்றில் சில கருந்துளைகள் சூரியனை விட 5 முதல் 100 மடங்கு அதிக எடையை கொண்டிருக்கும். இவை ஸ்டெல்லார்-மாஸ் வகையை சேர்ந்தவை. 

இந்த வகை கருந்துளைகள் பால்வெளி மண்டலத்தில் மட்டும் 10 கோடி வரை உள்ளது என கணக்கிடப்பட்டு இருக்கிறது. வானியல் நிபுணர்களின் பார்வைக்கு இந்த வகை கருந்துளைகள் வந்துள்ளன. பொதுவாக, கருந்துளைகள் ஊடே ஒளி கூட கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இந்த கருந்துளைகளின் மையத்தில் ஒளி மற்றும் பொருட்கள் உள்வாங்கப்படும். அண்டவெளியின் வில்லனாக இருக்கும் இந்த கருந்துளைகளில் ஒன்று சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்துள்ளது. இது விஞ்ஞானிகளை தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட வைத்துள்ளது. இதன் பரிணாமம் பற்றி புரிந்து கொள்ளும் ஆய்வுக்கு அவர்களை உட்படுத்தி இருக்கிறது. பூமியை இதற்கு முன்னர் நெருங்கிய கருந்துளையை விட மூன்று மடங்கு மிக அருகே இந்த கருந்துளை பூமியை நெருங்கியுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் கயியா விண்கலத்தில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்ததில் இருந்து இந்த கருந்துளை பற்றிய விவரங்களை ஆய்வு குழுவினர் கண்டு பிடித்துள்ளனர் என வானியல் இயற்பியலாளரான கரீம் எல்-பாத்ரி கூறி உள்ளார். இந்த கருந்துளையின் எடை சூரியனை விட 10 மடங்கு அதிகமாகும். 1,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்து இருக்கிறது. (ஓர் ஒளி ஆண்டு என்பது 9.5 டிரில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும். இதற்காக விஞ்ஞானிகள் ஜெமினி நார்த் என்ற தொலை நோக்கியை பயன்படுத்தி இருக்கின்றனர். 

இந்த தொலைநோக்கி வழியே கருந்துளை மற்றும் அதன் துணை பொருளான சூரியனை ஒத்த நட்சத்திரம் ஒன்றின் இயக்கமும் ஆராயப்பட்டுள்ளது. சூரியனை பூமி ஒரு குறிப்பிட்ட தொலைவில் சுற்றுவது போல், அதே தொலைவில் இந்த நட்சத்திரமும், கருந்துளையை வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என அறியப்பட்டுள்ளது. இந்த கருந்துளை உருவாவதற்கு முன்னர் ஒரு நட்சத்திரமாக இருந்திருக்கும் எனவும் அது ஒரு சில மில்லியன் ஆண்டுகளே உயிரோட்டத்துடன் இருந்திருக்கும் எனவும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டு இருக்கின்னர்.