#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து: 13 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்.!

ஸ்பெயின் நாட்டில் இருக்கும் முர்சியா நகரில் இரவுநேர கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான வாடிக்கையாளர்கள் அங்கு இருந்தனர்.
இந்நிலையில், கேளிக்கை விடுதியில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்படவே, பலரும் அக்னிருந்து அவசர கதியில் தப்பித்து உயிர்பிழைத்தனர்.
ஆனால், தீயில் சிக்கிக்கொண்ட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான மற்றும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டை பொறுத்தமட்டில் கடந்த 30 ஆண்டில் ஏற்பட்ட இரவுநேர கேளிக்கை விடுதி தீ விபத்தில், இது அதிக உயிர்பலி கொண்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.