96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
500 நாட்கள் 230 அடி ஆழமுள்ள மலை குகைக்குள் தனியாக வாழ்ந்த பெண்மணி.. வெளியே வந்ததும் முதல் ஆசை என்ன தெரியுமா?.!
மலை குகைக்குள் தனியே வாழ்ந்த பெண்மணி தான் முதலில் நன்கு குளிக்க வேண்டும் என கூறினார்.
ஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் பீட்ரிஸ் பிளாமினி என்ற பெண்மணி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி ஒரு சவாலை ஏற்றுள்ளார். அதன்படி கிரானாடா மலைப்பகுதியில் உள்ள குகைக்குச் சென்று ஆண்டுகணக்கில் அவர் தங்கி இருந்துள்ளார்.
அவர் செல்லும் போது தன்னுடன் ஆயிரம் லிட்டர் நீரை எடுத்துச் சென்ற நிலையில், குகைக்குள் 230 அடி ஆழத்தில் அவர் வசித்து வந்துள்ளார். அங்கு அன்றாடம் வேலை செய்வது, புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது, ஓவியம் தீட்டுவது என்று தனது பொழுதுகளை கழித்து வந்துள்ளார்.
எந்த விதமான வெளி உலகதொடர்பும் அவர் வைத்துக் கொள்ளாதபடி உளவியலாளர்களும் அவரை கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது 500 நாட்களைக் கடந்து அவர் குகையை விட்டு வெளியே வந்த நிலையில், நான் முதலில் நன்றாக குளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.