சிறையில் பெண் காவலரை கைதிக்கு இரையாக்கிய அதிகாரிகள்.. நீதி கேட்டு போராடும் பெண் காவலர்!
இஸ்ரேலின் கில்போவா சிறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது பாலஸ்தீனத்தை சேர்ந்த தண்டனை கைதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அந்த சமயத்தில் உயர் அதிகாரியாக இருந்த நிஷிம் பினிஷ் என்பவர் கைதிக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார். மேலும் பாதுகாப்பில் இருந்த பெண் காவலரை அந்த கைதிக்கு செக்ஸ் அடிமையாக இருக்க வற்புறுத்தியுள்ளார்.
அந்த கைதியும் பெண் காவலரை பலமுறை சித்திரவதை செய்து கற்பழித்துள்ளார். இத்தனை கொடுமைகளை அனுபவித்துள்ள அந்த பெண் காவலர் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் யார் லாபிட் "பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பெண் காவலர் தீவிரவாதியால் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும். மேலும் அந்த பெண் காவலருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என அவர் கூறியுள்ளார்.