மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டீசல் நிரப்ப காத்திருந்த டிரைவர் லாரியிலே உயிரிழந்த பரிதாபம்..!
டீசல் நிரப்ப காத்திருந்த நேரத்தில் லாரி டிரைவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 மாதங்களாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாமல் இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் பெட்ரோல்-டீசல் சில்லறை விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்ப காத்திருக்கும் வாகன ஓட்டிகள், அடிக்கடி மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இலங்கை மேற்கு மாகாணத்தில் உள்ள அங்குருவடோட்டா பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் 63 வயதான லாரி டிரைவர் ஒருவர் கடந்த 5 நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் நேற்று தனது லாரியில் இறந்து கிடந்துள்ளார். 5 நாட்களாக வரிசையில் காத்திருந்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுவரையில், இவரையும் சேர்த்து எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பும் மையங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதால் இலங்கையில் பெரும் சோகம் நிலவுகிறது.