துவங்கியது சோதனை ஓட்டம்.. மனிதர்களுக்கு முதல்முறையாக செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பு மருந்து!



The first test of corono vaccine

உலகம் முழுவதும் பரவி 1,80,000 பேரை தாக்கியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் நேற்று ஒருநாளில் மட்டும் 2098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 50 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பு மருந்தினை கண்டறிய பல நாட்டு விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். இதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த mRNA - 1273 என்ற தடுப்பு மருந்தினை நேற்று முதல்முறையாக மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்துள்ளனர்.

Corono vaccine

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் மொடர்னா என்ற உயிர்தொழில்நுட்ப நிறுவனம் சேர்ந்து இந்த தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தானது பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தான் பொது பயன்பாட்டிற்கு வருமாம். இதற்கு கிட்டத்தட்ட 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்தினை சோதனை செய்வதற்காக தானாக முன்வந்துள்ள 18 முதல் 55 வரையிலான 45 பேரை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த மருந்தானது முதல்முறையாக வாஷிங்டனை சேர்ந்த 43 வயதான ஜெனிபர் ஹாலர் என்ற மென்பொறியாளருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.