நாளை இரவு நிகழப்போகும் அதிசயம்..!! ஒரே நேர்க்கோட்டில் 5 கிரகங்கள்..!! கண்டு களிக்க தயாராவோம்..!!



The miracle that will happen tomorrow night is 5 planets in the same line

நாளை செவ்வாய்க்கிழமை வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாளை இரவு செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப் போகின்றன.

நாசா விண்வெளி ஆய்வாளர்கள், இந்த கிரக வரிசையைக் காண விரும்புவோர், சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும் என்றும் கொஞ்சம் தாமதித்தாலும், ஒரே நேரத்தில் 5 கிரகத்தை பார்க்க முடியாது என்று கூறுகின்றனர். 

ஏனென்றால் சூரியன் மறைந்த அரைமணி நேரத்திலேயே, புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். வானம் தௌிவாக இருந்தால், மேற்குப் திசையில் நன்றாக பார்க்க முடியும் சூழலில் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காணலாம்.

வெறுங்கண்ணால் இந்த கிரகங்களை பார்க்க  முடியுமா என்றால், வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றைக் காண்பது ஓரளவு எளிது என்கின்றனர் விண்வெளி ஆய்வாளர்கள்.

வெள்ளி மிகவும் பிரகாசமாக இருக்கும், செவ்வாய் கிரகம், நிலவுக்கு அருகில் சிவப்பாய் ஒளிரும். ஆனால் புதனும், யுரேனசும் கொஞ்சம் பிரகாசம் குறைவாக இருக்கக் கூடியவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பதுதான் கொஞ்சம் சிரமமாக இருக்கும். பைனாகுலர் மூலமாக பார்த்தால் இன்னும் நன்றாக பார்க்க முடியும்.

நம்மால் பார்க்கவே முடியாத யுரேனஸ் கிரகத்தை பார்ப்பதற்கான அரிய வாய்ப்பாக இது அமையும். யுரேனஸ் வெள்ளிக்கு மேலே, பச்சையாக ஒளிரும் என்கிறார் நாசா விஞ்ஞானி குக். 

இது போல பல்வேறு கிரகங்கள், பல்வேறு எண்ணிக்கையில் வானில் வரிசையாக தோன்றுவது அவ்வப்போது நிகழக்கூடிய ஒன்றாகும் கடந்த வருடம் கோடை காலத்தில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றின. அதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் கடந்த ஜூனில் நடந்தது.