டோங்கோ சுனாமி: 27 மணிநேரம் நீந்தி கரைசேர்ந்த 57 வயது மாற்றுத்திறனாளி.. அழிவிலும், ஆச்சரியம்.! அக்வாமேன் ஆப் டோங்கோ..!



Tonga Tsunami Agua Man 57 Aged Man Lisala Folau Swim 27 Hours at Sea

சுனாமி அலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டவர், 27 மணிநேரம் நீந்தி கரைசேர்ந்துள்ளார். இவர் டோங்கனின் அக்வாமேன் என்றும் தற்போது அழைக்கப்பட்டு வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பசுபிக் பிராந்தியத்தில் உள்ள டோங்கா நாட்டில், கடலுக்கடியில் இருந்த எரிமலை அடுத்தடுத்து வெடித்து சிதறியது. அதிபயங்கர வெடிப்பை எரிமலை ஏற்படுத்தியதால், அங்குள்ள பல தீவுகளை சுனாமி தாக்கியது. சில தீவுகளில் 6 மீட்டர் வரை சுனாமி அலைகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எரிமலை வெடிப்பு சம்பவமானது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஹிரோஷிமா மீது வீசிய அணுகுண்டை விட 500 மடங்கு சக்தி அதிகமானது என்றும் தெரியவருகிறது. 

அங்குள்ள சிறிய தீவுகளில் ஒன்றாக இருக்கும் அட்டாட்டா என்ற தீவையும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அட்டாட்டா தீவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தவர் லிசாலா போலாவ் (Lisala Folau, வயது 57). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். லிசாலா போலாவ் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டவராக இருந்த நிலையில், வீட்டில் இருந்தவாறு ஓவியங்கள் வரைந்து வந்துள்ளார்.

Tonga

இந்த தீவில் 60 பேர் மட்டும் வசித்து வருகிறார்கள். தீவை தாக்கிய சுனாமி அலைகள், அவரின் இல்லத்தையும் அழித்துள்ளன. சுனாமி பேரலையில் சிக்கி லிசாலா அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரின் மகன் அவரை காப்பாற்ற முயற்சித்து குரல் எழுப்பிய போதும், நாம் இறந்துவிடுவோம் என்று நினைத்த லிசாலா, தனது மகனையும் ஆபத்தில் சிக்க வைக்காமல் இருக்க அமைதியாக நீருடன் சென்றுள்ளர்.

சுனாமி அலையுடன் பயணம் செய்த லிசாலா போலாவ், அங்குள்ள டோங்காடாப்பு தீவுக்கு நீந்தி சென்றுள்ளார். நீரின் ஓட்டத்திலேயே பயணித்தவர் 27 மணிநேரம் தொடர்ந்து நீந்தியவாறு கரையை சென்றடைந்துள்ளார். இந்த தகவல் தற்போது தெரியவந்து, லிசாலா போலாவ் டோங்கோவின் அக்வாமேன் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.