53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
"நாங்கள் அப்பாவாகப்போகிறோம்" - ஓரினசேர்க்கை திருமணம் செய்த ஜோடி அறிவிப்பு.!
அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்த தன்பாலின ஈர்ப்பு ஜோடியான ஆதித்யா மதிராஜு - அமித் ஆத்மா தங்களுக்கு ஏற்பட்ட பழக்கத்தால் நெருங்கி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில், இருவரும் மே மாதம் தங்களது குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ஆதித்யா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிறந்தநாள் விருந்தில் சந்தித்தோம். அன்று முதல் இன்று வரை எப்போதும் ஆத்ம தோழனாய் இருப்போம் என உறுதியெடுத்தோம்.
நாம் இவ்வுலகத்திற்கு எதிராக நின்று தைரியத்தால் நமது கனவை நிறைவேற்றினோம். இன்று அப்பாவாக தயாராகிறோம். மே மாதம் 2023ல் எங்களின் குழந்தையை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.