இனி இவங்க எல்லோரும் வங்கியில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்கவேண்டிய அவசியம் இல்லை!



No minimum balance for SBI bank customers

பொதுவாக அணைத்து வங்கிகளிலும் குறைந்தபடச்ச இருப்பு தொகை என்ற ஒரு கொள்கை உண்டு. புதிதாக கணக்கு தொடங்கியதில் இருந்து ஒவொரு மாதம் குறைந்தபட்ச தொகை ஒன்றை கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் வங்கிகள் அபராதம் விதிக்கும்.

இந்த விதிமுறையானது SBI வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் மெட்ரோ நகரங்களில் SBI கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்துருக்கவில்லை எனில் 10 முதல் 15 ரூபாயும், அதற்கான GST யும் வசூலிக்கப்படும்.

sbi

அதுவே புறநகர் பகுதி SBI வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் 7 . 50 ரூபாய் முதல் 12  ரூபாய் வரையும் அதற்கான GST யும் வசூலிக்கப்படும். மேலும் கிராமபுற SBI வாடிக்கையாளராக இருந்தால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் அபராதமும் அதற்கான GST யும் வசூலிக்கப்படும். இவை அனைத்தும் சாதாரண சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கான அபராத தொகை.

அதுவே கீழ்கண்ட சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு குறைந்தபட்ச இருப்பு தொகையும் வைத்திருக்க தேவை இல்லை என்று SBI வங்கி கூறியுள்ளது.

sbi

SBI அடிப்படை சேமிப்பு கணக்கு தனியாக வைத்திருப்பவர்கள் அல்லது ஜாயிண்ட் கணக்காக வைத்திருப்பவர்கள் எந்த ஒரு குறைந்தபட்ச இருப்பு தொகையும் வைத்திருக்க தேவை இல்லை. அதே போல ஜன் தன் யோஜனா என கூறப்படும் பிரதமர் மோடி தொடங்கிவைத்த சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்பு தொகை வைத்திருக்க அவசியம் இல்லை.