ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
உசிலை: மதுபானக் கடையில் பயங்கரம்.. 6 பேர் கும்பலால் காவலர் கல்லைப்போட்டு கொலை.!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக இருப்பவர் முத்துக்குமார் (வயது 40). காவலர் முத்துக்குமார், அங்குள்ள கள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
இதனிடையே, மதுபானக்கடையில் மதுபானம் அருந்தும்போது, முத்துக்குமார் - சிலர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இத தகராறில் ஆத்திரமடைந்த 6 பேர் கும்பல், காவலரை கடுமையாக தாக்கியுள்ளது. மேலும், கல்லை தலையில் போட்டு கொலை செய்தது.
இதையும் படிங்க: மதுரை: வீட்டு வாசலில் ரவுடி வெட்டிப்படுகொலை; சிறையில் ஸ்கெட்ச், வெட்டிசாய்த்த கும்பல்.!
கொடூர கொலை
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், காவலரை கொலை செய்த நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். பணி முடித்த பின்னர் மதுபானம் வாங்கி அருந்தியபோது, இத சம்பவம் நடந்துள்ளது.
காவலருடன் வந்திருந்த ராஜராஜம் என்பவர் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரை: பயணம் செய்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பலி.. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.! அதிர்ச்சிதரும் காட்சிகள்.!