அதிரடியாக குறைந்த தக்காளி விலை.! கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி எவ்வளவு தெரியுமா.?



tomato price decreased

கடந்த மார்ச் மாதம் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.2க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் நாளைக்கு நாள் விலை உயர்ந்து கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தக்காளி விலை கிலோ  ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் தக்காளி விலை தற்போது சற்று குறைந்திருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ. 90 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 35 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ. 55 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ. 65 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் வருகிற நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.