மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல அஜித்தின் மாமனார் - மாமியாரா இது?.. காணக்கிடைக்காத அல்டிமேட் லெவல் போட்டோ..!!
நடிகர் அஜித்தின் மாமியார் மற்றும் மாமனாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 1993-ல் தமிழில் வெளியான "அமராவதி" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜித். இவரது முதல் படம் அந்த அளவிற்கு வெற்றியை தராத நிலையில், இவருடைய தமிழ் உச்சரிப்பும் சரியாக இல்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அஜித், தனது விடாமுயற்சியுடன் போராடி ஆசை, காதல் கோட்டை போன்ற படங்களில் அற்புதமாக நடித்திருந்தார். அடுத்தடுத்து வாலி, தீனா, சிட்டிசன் போன்ற படங்களில் நடித்து வெற்றிகளை குவித்த அஜித், அதன் மூலம் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார்.
இவர் ஒவ்வொரு முறையும் விழும்போதும், பீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் எழுந்து தனது திறமையை நிரூபிப்பார். இந்த நிலையில் இவரது நடிப்பில் ஏகே61 திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், அஜித் தனது நண்பர்களுடன் நாடு முழுவதும் பைக் ரேஸ் சென்று அங்கிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.
இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகை ஷாலினியின் தாய் - தந்தையர் மற்றும் நடிகர் அஜித்தின் மாமனார்-மாமியாரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் "தலயோட மொத்த குடும்பத்தையும் பார்த்தாச்சுடா யப்பா" என்று பெருமூச்சு விடுகின்றனர்.