அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பிரபல இயக்குனரை கடுமையாக திட்டிய அஜித்குமார்.! என்ன காரணம் தெரியுமா.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தமிழில் 90களில் ஆரம்பங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்து வந்தாலும், தனது நடிப்பு திறமையின் மூலம் இன்று வரை திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி வருகிறார்.
மேலும் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம், அட்டகாசம், காதல் மன்னன் போன்ற திரைப்படங்கள் அஜித் குமாரின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அந்த அளவிற்கு இப்படங்கள் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.
இதனை அடுத்து நடிகர் அஜித்திற்கும், இயக்குனர் சரணிற்க்கும் இடையில் நல்ல நட்பு இருந்து வருகிறது என்று திரைத்துறையில் பேசப்பட்டு வந்தது. மேலும் இயக்குனர் சரண் வேறு எந்த படங்கள் இயக்கினாலும், அந்த கதையை நடிகர் அஜித்திடம் கூறிவிட்டு தான் இன்னொரு ஹீரோவை வைத்து படங்களை இயக்குவாராம்.
இதுபோன்ற நிலையில், சரண் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு ஆர்யா கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் வட்டாரம். இப்படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரும் வெற்றி அடையவில்லை. ஆனால் தற்போது இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து படம் வெளியான போதே அஜித், இயக்குநர் சரணிற்கு கால் செய்து வட்டாரம் படத்தின் கதையை ஏன் எனக்கு சொல்லவில்லை. கதை அருமையாக உள்ளது என்று கூறி இயக்குனர் சரணை திட்டி இருக்கிறார். இதனை சமீபத்திய பேட்டியில் இயக்குனர் சரண் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.