#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே.! 17 லட்சம்..இப்படியெல்லாமா மோசடி செய்யுறாங்க.! ஷாக் தகவலை பகிர்ந்த நடிகர் டேனியல்!!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து பெருமளவில் ஹிட்டான திரைப்படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் டேனியல். அதுவும் இப்படத்தில் அவர் பேசிய பிரெண்டு லவ் மேட்டரு என்ற டயலாக் செம ஹிட்டானது.
அடுத்தடுத்து பல படங்களில் நடித்த அவருக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் மூலம் பெருமளவில் பிரபலமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் டேனியல் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாந்தது குறித்து கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, நோ ப்ரோக்கர் ஆப் மூலம் வீடு வாடகைக்கு தேடினேன். அப்போது ஒரு நிறுவனம் என்னை தொடர்பு கொண்டு லீசுக்கு வீடு தருவதாகவும், தாங்களே மாதாமாதம் வாடகையை செலுத்தி விடுவதாகவும் கூறினர். அதுமட்டுமின்றி இரண்டு வருடங்களுக்கு பின்னர் முதலீட்டுத் தொகையை கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் தங்கள் மூலம் லீசுக்கு இருக்கும் சிலரையும் அறிமுகம் செய்தனர்.
அதனை நம்பி 17 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் வீட்டில் குடியேறி மூன்று மாதங்களுக்கு பின் வீட்டின் ஓனர் வாடகை தரவில்லை என கூறி என்னை வீட்டை காலி செய்ய சொன்னபோதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன் என கூறியுள்ளார். மேலும் அந்த நிறுவனம் இவ்வாறு தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக தான் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் டேனியல் தெரிவித்துள்ளார்.