ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
நிலத்தகராறு காரணமாக பயங்கரம்.. 8 பேர் கும்பல் வீடுபுகுந்து அதிர்ச்சி செயல்.. திருவண்ணாமலையில் பரபரப்பு.!

முன்விரோதத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, மையூர் பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவர் விவசாயி ஆவார். இவரின் மகன்கள் குமரேசன், லோகேஷ். இதே கிராமத்தில் வசித்து வருபவர்கள் சோமசுந்தரம் மகன் மாதேஸ்வரன்.
இதையும் படிங்க: ஏரி நீரில் மூழ்கி சிறார்கள் இருவர் பலி.!
நிலத்தகராறில் தீர்ப்பு
இருதரப்பு குடும்பத்துக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்டகால பிரச்சனை இருந்து வந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்திலும் நடைபெற்ற நிலையில், சேகர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.
8 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்
இதனால் சேகர் நிலத்தில் இருக்கும் மரத்தை அகற்ற ஆட்களை நியமனம் செய்துள்ளார். இந்த விஷயத்தில் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன் மற்றும் அவரின் தரப்பில் 8 பேர் சேர்ந்து, விவசாயி சேகரின் வீட்டுக்கு சென்று சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த சம்பவத்தில் சேகர், வசந்தம்மாள், லோகேஷ், குமரேசன் ஆகியோர் கடுமையான வெட்டுக்காயத்துடன் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
மேலும், அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாதேஸ்வரன், மாதவன், சேட்டு, குமார், கலைவாணி, பாபு உட்பட 8 பேர் கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: நிலத்தகராறில் பயங்கரம்.. மூதாட்டி எரித்துக்கொலை.!