#HBDKamalHassan: கலைத்தாயின் மகன், தமிழ் திரையுலகின் வைடூரியம், உலக நாயகன் கமல் ஹாசனுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.!



actor-kamal-hassan-birthday-today

 

தமிழ் திரைஉலகில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கி, அரை நூற்றாண்டு கடந்து உலக நாயகனாக ஜொலித்து, இந்திய அளவிலும் உலக அளவிலும் பல விருதுகளை பெற்ற நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன். 

Kamal Hassan

நவம்பர் 7, 1954-ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் சீனிவாசனுக்கும் - ராஜலட்சுமிக்கும் மகனாகப் பிறந்தவர் இவர். தந்தை வழக்கறிஞர் ஆவார். பரமக்குடியில் ஆரம்பக் கல்வியை முடித்த கமல்ஹாசன், பின்னர் குடும்பத்துடன் சென்னையில் குடியேறிய நிலையில், அங்குள்ள சாந்தோம் பள்ளியில் கல்வி பயின்றார். 

Kamal Hassan

தனது தந்தையின் விருப்பப்படி கமலஹாசன் திரைத்துறையிலும், நடன துறையிலும் ஈடுபாடு கொண்ட நிலையில், ஏ.வி மெய்யப்பனின் மகன் ஆசியுடன் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். அதனைத்தொடர்ந்து, தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துள்ள கமல் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார். 

Kamal Hassan

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு போர் கருவியாக தன்னை தயார் படுத்திக்கொண்டு அரசியல் வாழ்க்கையையும் தொடங்கியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தோற்றுவித்த கமல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு எதிராக தன்னை நிலைநிறுத்தி அரசியல் பயணம் செய்கிறார். 

Kamal Hassan

1960-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், 1962ல் மலையாள திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 1976ல் தெலுங்கு திரைப்படத்திலும், 77ல் வங்காளம் & கன்னட திரைப்படத்திலும் நடிக்க தொடங்குகிறார். 1981ல் இந்தி திரைப்படத்திற்கும் அறிமுகமாகிறார். 

Kamal Hassan

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது திரைத்துறை வாழ்க்கையானது அரை நூற்றாண்டை கடந்தும் நாயகனாக தொடருகிறது. அவரது கலை ஈடுபாடை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன், பத்மஸ்ரீ, செவாலியே விருதுகளையும் வழங்கி உள்ளது. 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கமலஹாசன் தசாவதாரம் படத்தில் பத்து கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று அவருக்கு பிறந்தநாள். பலரும் அவர்க்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். நாம் தெரிவிக்கலாம்...