மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென அப்படியொரு கெட்டப்பில் சென்று விஜய்யை சந்தித்த நடிகர் கார்த்தி! செம சர்ப்ரைஸான தளபதி!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் அதே ஸ்டூடியோவில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்தார் படத்திற்காக வயதான தோற்றத்தில் இருந்த நடிகர் கார்த்தி அதே கெட்டப்பில் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு கார்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். ஒரு ஓரமாக நின்று ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி பின்னர் விஜய்யிடம் சென்று தான் கார்த்தி என கூறி பேசினாராம். அவரைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த விஜய் அவரது கெட்டப் சூப்பராக இருக்கிறது என்று கூறி வாழ்த்தி தெரிவித்துள்ளாராம். பின்னர் இருவரும் நலம் விசாரித்து திரையுலகம் குறித்து பேசிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.