ஆசிரியர் கார் ஏற்றிக்கொலை? பதறவைக்கும் சம்பவம்.. சேலத்தில் அதிர்ச்சி.!



in Salem Teacher mystery Death 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி, குஞ்சாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் மணி. 

இவர் இன்று காலை வழக்கம்போல, தனது பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தார். இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவரும் இருந்த நிலையில், அவரை வழியில் இறக்கிவிட்டு, பின் பேசிக்கொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: #Watch: பட்டப்பகலில் கொல்லப்பட்ட ரௌடி; விபத்து என நினைத்து வீடியோ எடுத்து கண்ணீர்விட்ட பெண்.!

கார் மோதி பலி

அச்சமயம், மணிக்கு பின்புறம் வந்த கார் ஒன்று, அவரின் மீது மோதி நிற்காமல் சென்றது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மணி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. 

Salem

காவல்துறை விசாரணை

கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆசிரியர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 50 வயது தொடக்கப்பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது.!