ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
திமுக - தவெக இடையே போட்டி.. விஜய் பேச்சுக்கு இபிஎஸ் பதில் என்ன? பேட்டி உள்ளே.!

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக - தவெக இடையே தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டி என பேசினார். இந்த விஷயம் பிரதான எதிர்க்கட்சிகள் இடையே எதிர்ப்பை சந்தித்தன.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விஜயின் கேள்விகள் குறித்த விஷயத்துக்கும் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: நடத்தை சந்தேகத்தால் விபரீதம்; 3 வயது சிறுமியை கழுத்து நெரித்துக்கொன்ற தந்தை.!
எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
அப்போது இபிஎஸ் பேசுகையில், "தொண்டர்களை உற்சாகப்படுத்த, கட்சியின் வளர்ச்சிக்காக விஜய் பேசினார். தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். நாங்கள் எதிர்க்கட்சி என மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.
கட்சியும், ஆட்சியையும் எப்படி இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருந்தனர். மக்கள் கட்டாயம் எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கொடுப்பார்கள்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: சென்னையில் 1 மணிநேரத்திற்குள் 7 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. வலிமை திரைப்பட பாணியில் பயங்கரம்.!