96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தளபதி விஜய் படத்தில் நடிக்க மறுத்த நவரச நாயகன் கார்த்திக்... என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் 80,90களில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் நவரச நாயகன் கார்த்திக். முரளி என்னும் இயற்பெயர் கொண்ட கார்த்திக் முதலில் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அன்று முதல் இன்று வரை நடிகர் கார்த்திக் என்ற தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் சந்திரமௌலி என்ற திரைப்படத்தில் இவரது மகனுடன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் கார்த்திக் அவர்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. காரணம் கார்த்திக் அவர்களின் காலில் பிரச்சனை இருப்பதால் நீண்ட நேரம் நிற்க முடியாதாம்.
தளபதி 67 படத்தில் வில்லனாக நடித்தால் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும். அப்போது கால் பிரச்சனை பெரிதாகி விடும் என்பதை கருத்தில் கொண்டு நடிக்க மறுத்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.