#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாசிக்காவின் காதல் வலையில் சிக்கிய நடிகர் மகத்! மகத்தின் முன்னாள் காதலி எடுத்த அதிர்ச்சி முடிவு! என்ன நடக்க போகுதோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் ஓன்று. இதன் சீசன் இரண்டு தொடங்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சீசன் ஓன்று அளவிற்கு இதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான நடிகர் மகத் தனது சக போட்டியாளரான நடிகை யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக போன வாரம் தெரிவித்தார். ஆனால் மகத்திற்கு ஏற்கனவே வெளியில் காதலி ஒருவர் உள்ளார்.
நடிகர் மகத்தின் உண்மை உருவத்தை கண்டறிந்த அவரது காதலி இனி என் வாழ்க்கையில் மகத் இல்லை என அவரின் காதலி பிராச்சி மிஸ்ரா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் 8 மாதங்களாக துபாயில் வசிக்கும் மாடல் மற்றும் தொழிலதிபரான பிராச்சி மிஸ்ராவை நடிகை மகத் காதலித்து வந்தார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அவருடன் தங்கியிருந்த மற்றொரு போட்டியாளரான யாஷிகா மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அதனை முதலில் ஒத்துக்கொள்ளாத மஹத் சமீபத்தில் தான் யாஷிகாவை காதலிப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார் .
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிராச்சி மஹத் என் வாழ்க்கையில் இல்லை என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் அவர் கூறியதாவது, நான் மனதார காதலித்த ஒருவரை மகிழ்ச்சியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தேன் மேலும் பிக்பாஸ் டைமிங்கிற்கு ஏற்ப எங்களது வாழ்க்கையை திட்டமிட்டோம்
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வரை மஹத் என்னை காதலித்தது உண்மை. ஆனால் அவர் தற்போது யாஷிகாவை காதலிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் .
எனவே நான் மஹத்தைவிட்டு விலக முடிவு செய்து விட்டேன். இனி என் வாழ்க்கையில் மஹத் இல்லை. நான் மிகவும் காயப்பட்டிருக்கிறேன்.இதனால் என் வாழ்க்கை மாறி விடாது.
மஹத்தை பற்றி என்னிடம் கேட்பதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்.
அவன் மீது அக்கறை கொண்ட மும்தாஜிடம் மிக மோசமாக நடந்து கொள்கிறான். மேலும் அவனது நலம் விரும்பியான ஜனனியையும் அவன் மதிக்கவில்லை இனி என் வாழ்க்கையில் அவன் இல்லை. அவனைக் குறித்து என்னிடம் யாரும் சமூகவலைத்தளங்களில் எதுவும் கேட்காதீர்கள் யாருடைய அனுதாபமும் எனக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.