மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகரின் பேச்சால் முகம் சிவந்த பிரபுதேவா.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?.. தல - தளபதி பிரச்சனை இங்குமா?..!
பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் "போக்கிரி". பிரபுதேவா திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாது அவ்வப்போது படத்திலும் நடித்து வருவார். அந்த வகையில் தற்போது இவர் "பொய்க்கால் குதிரை" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் இப்படத்தில் பிரபுதேவா மட்டுமல்லாது வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி மற்றும் சரத்குமார் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பிரமோஷன் பணியில் ஈடுபட்டுள்ள படக்குழுவினர், சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களையும் சந்தித்தனர். செய்தியாளர்களை சந்தித்த போது, பலரின் கவனத்தையும் ஈர்த்தது ஜான் கோக்கன் அணிந்திருந்த அஜித்தின் டீ-சர்ட். விஜய்யை வைத்து இயக்கிய பிரபுதேவாவின் பட விளம்பர பணிக்கு அஜித் டி-சர்ட் அணிந்து வந்ததால் இணையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதற்கு விளக்கம் கொடுத்த அவர், அஜித்தை ஒரு சூப்பர் ஹீரோ என்றும், நடிகர் அஜித்தால் தான் சினிமாத்துறைக்கு நான் ஈர்க்கப்பட்டேன். எனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் அஜித் சார் கொடுத்த ஊக்கத்தினால் நான் தமிழ்த்திரையுலகில் தற்போது இருக்கிறேன். அதனால் தான் அவரின் டீ-சர்ட் கொண்ட புகைப்படத்துடன் வந்தேன்". என்று தெரிவித்தார்.
Attended my first ever official movie Press meet yesterday on the 23rd of July 2022 for my upcoming Tamil film #PoikkalKuthirai releasing on August 5th,2022.The T-shirt I am wearing is a small gesture to show my love,my gratitude and my respect to MY SUPERHERO-AJITH KUMAR SIR. pic.twitter.com/tWBLrQ85M9
— Highonkokken (@johnkokken1) July 24, 2022