"நான் சாப்பிடுவதை தான் என்னிடம் வேலை செய்பவர்களுக்கும் கொடுப்பேன்!" ராஜ்கிரண் நெகிழ்ச்சி!
1989ம் ஆண்டு "என்னப் பெத்த ராசா" என்ற படத்தில் அறிமுகமானவர் ராஜ்கிரண். இவரது இயற்பெயர் காதர் என்பதாகும். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். 1991ம் ஆண்டு "என் ராசாவின் மனசிலே" படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார்.
நடிகர் வடிவேலு மற்றும் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார் ராஜ்கிரண். சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நந்தா, பாண்டவர் பூமி, கோவில், சண்டைக்கோழி ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
நன்றாக படித்து காவல் அதிகாரியாக வேண்டும் என்பதே இவரது ஆசையாக இருந்ததாம். சமீபத்தில் ஒரு பேட்டியில், " நான் 15 வயது வரை பணக்கார வீட்டுப்பிள்ளை போல் தான் வளர்ந்தேன். 16ஆவது வயதில் வேலை தேடி சென்னைக்கு வந்தேன்.
ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது, இங்கு நிறைய பேர் என்னைப்போல் வேலை தேடி வந்து பட்டினியாக தான் நாட்களைக் கழிக்கின்றனர். அதனால் இப்போது என்னிடம் வேலை செய்பவர்களுக்கு நான் என்ன சாப்பிடுகிறேனோ அதையே தான் தருகிறேன்" என்று கூறினார்.