தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
11 வருட காத்திருப்பு.! நடிகர் ராம் சரணுக்கு குழந்தை பிறந்தாச்சு.! என்ன குழந்தை தெரியுமா??
தெலுங்கு சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மெகா ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம்சரண். இவரும் தெலுங்கில் பல மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்து தமிழில் டப் செய்யப்பட்ட பல படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
மேலும் நடிகர் ராம்சரண் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்திருந்த பான் இந்தியா திரைப்படமான ஆர்ஆர்ஆர் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றது. நடிகர் ராம் சரணுக்கு அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த உபாசனா காமினேனி என்பவருடன் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் உபாசனா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Actor @AlwaysRamCharan and his wife @upasanakonidela are blessed with a baby girl in Hyderabad.
— Ramesh Bala (@rameshlaus) June 20, 2023
Congratulations to the proud parents and the extended family on this joyous occasion.. #RamCharan #Upasana pic.twitter.com/WUc7UToSMz
இந்த நிலையில் இன்று ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதியினருக்கு ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தாயும் சேயும் நலமாக உள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.