திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட வசந்த மாளிகை திரைப்படம்; கொண்டாட்டத்தில் சிவாஜி கணேசன் ரசிகர்கள்.!
சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி, அவர் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1972ம் ஆண்டு செப் 29 அன்று வெளியான இப்படம் இன்று வரை பலராலும் விரும்பப்படுகிறது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வசந்த மாளிகை திரைப்படம் திரையிடப்பட்டது.
சென்னையில் உள்ள எழும்பூர், ஆல்பர்ட், சத்தியம் திரையரங்கில் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் கட்அவுட் வைத்து படத்தைக் கொண்டாடினர். மேலும், பாடல் காட்சியின் போது திரையரங்கில் நடனமாடி தங்களின் மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
சிவாஜி கணேசனின் ரசிகரான நடிகர் சத்யராஜும் தான் இளமையுடன் வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்க வந்திருப்பதாக தெரிவித்தார். சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் சத்யராஜ் படத்தை பார்த்து ரசித்தார்.
Classic😍🥹 #Vasanthamaligai pic.twitter.com/7dIFqkss6F
— balaji kasinathan (@balaji_mar96) July 23, 2023