லாரியில் பயணம் செய்த வடிவேலு! இருந்த பணமும் போச்சு! கடைசில என்னதான் ஆச்சு?
தமிழ் சினிமாவில் இன்று பெரிய நிலைமையில் உள்ள யாரும் எளிதாக இந்த இடத்திற்கு வந்துவிட வில்லை. ஒருசிலர் சினிமா பின்னணியை வைத்து சினிமாவிற்குள் வந்திருந்தாலும் பெரும்பாலானோர் தங்களது திறமையாலும், விடா முயற்சியாலும்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். அதில் ஒருவர்தான் நம்ம வைகைப்புயல் வடிவேலு சார் அவர்கள்.
ஒல்லியான உடம்பு, கருப்பான தேகம், சாதாரண ஒரு தோற்றம். சினிமாவுக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத இவர் இன்று தமிழ் சினிமாவின் ஒரு சாகப்தம். ஒரு சில காரணங்களால் இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இவர் பேசிய வசனங்கள், வார்த்தைகள் இன்று பல படங்களின் பெயர்களாக அமைகின்றது.
யார் இந்த வடிவேலு? மதுரை மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு அவர்கள் தனது சிறு வயதிலிருந்தே நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்து வந்துள்ளார்.பின்னர் சினிமா மீது இருந்த மோகத்தால் ஊரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்தது வெறும் என்பது ரூபாய்கள்.
இவர் முதலில் சென்னைக்கு வந்தது ஒரு லாரியில்தான். அதுவும் லாரியின் மேற்கூரையில் பயணித்தவாறு. ஆம், அப்போதைய காலத்தில் லாரியின் உள்ளே பயணிக்க வேண்டுமென்றால் 25 ரூபாய் அதனால் 15 ரூபாய் கொடுத்து மேற்கூரையில் தூங்கியவாறு பயணம் செய்துள்ளார் வடிவேலு. இவரது கெட்ட நேரமோ என்னமோ இவரிடம் இருந்த 80 ரூபாயும் காற்றில் பறந்துவிட்டது.
பின்னர் லாரி டிரைவரிடம் பணம் துளைந்துவிட்டது என்று புலம்பியுள்ளார் வடிவேலு. பின்னர் அந்த லாரி டிரைவர் வடிவேலுக்கு ஹோட்டலில் உணவை வாங்கி கொடுத்துவிட்டு கொஞ்சம் பணத்தையும் கொடுத்து சென்னையில் இறக்கி விட்டிருக்கிறார்.
அதன் பின்னர் நடிகர் ராஜ்கிரனிடம் உதவியாளராக சேர்ந்துள்ளார் வடிவேலு. வடிவேலுவின் திறமையை பார்த்த ராஜ்கிரண் அவர்கள் வடிவேலுக்கு ‘என் ராசாவின் மனதிலே’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.