மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கம்பீரமாக இருந்த எங்க கேப்டனுக்கா இப்படியொரு நிலைமை.! கண்கலங்கிய ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது தேசபற்று, சமூக நலன்மிக்க படங்களில் கம்பீரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அவரை ரசிகர்கள் பாசமாக கேப்டன் என அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய அவர் முழு நேரமும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். ஆனால் சில காலங்களாக அவரது உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. அவரால் சரியாக பேச முடியாமல், நடக்க முடியாமல் இருந்தார். அதற்கு வெளிநாடுகளில் சிகிச்சைகள் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சற்று நலமுடன் உள்ளார்.
#vijayakanth@iVijayakant #PremalathaVijayakanth
— Mayur GY 🎞✂( Film Maker & Editor ) தளபதி (@DirectorMayurGY) August 15, 2022
75th Independence day pic.twitter.com/tQWwM71KY2
இந்நிலையில் நேற்று 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவியுடன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் தனது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை நோக்கி கையசைத்துள்ளார். அதை கண்ட ரசிகர்கள் கம்பீரமாக இருந்த எங்க கேப்டனுக்கா இப்படியொரு நிலைமை என கண்கலங்கியுள்ளனர்.