உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் போண்டாமணி: விஜயகாந்த் இரங்கல்.!



Actor Vijayakanth Regret Bonda Mani 

 

கிட்னி செயலிழப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி, நேற்று இரவு 10:30 மணியளவில் வீட்டில் வைத்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் போண்டாமணியின் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள ட்விட் பதிவில், "பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர் களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.