மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிப்பீர்களா... ஆர்யாவின் முன்னாள் காதலி கூறிய பதிவு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தனக்கு வரன் தேட எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கினார். அந்த 16 பெண்களில் ஒருவராக ஆர்யாவின் மீது தீராத காதல் கொண்டவர் தான் அபர்ணதி. ஆனால் அந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யாமல் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வு அபர்ணதிக்கு வருத்தத்தை தந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஜெயில் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதினை பெற்றார். அப்போது அவரிடம் ஆர்யாவுடன் இணைந்து ஜோடியாக நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அபர்ணதி ஆர்யாவுடன் நடிக்கனும்னு விருப்பமே இல்லை என்று கூறிவிட்டார்.