மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
" என்னுடைய மாற்றத்திற்கு கமல் சார் தான் காரணம் " நடிகை அபிராமி பேட்டி..
2004ம் ஆண்டு வெளியான கமலின் 'விருமாண்டி' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் அபிராமி. கேரளாவைச் சேர்ந்த அபிராமி, முன்னதாக 'தோஸ்த்' படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார்.
அதன்பிறகு கார்மேகம், சமஸ்தானம் எனப் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், விருமாண்டி படம் தான் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்தப் படத்தில் நடித்தது குறித்து அபிராமி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதில் அவர், " என் அம்மா, பெரியம்மா என, என் குடும்பத்தில் அனைவரும் கமல் சாரின் ரசிகர்கள். அதனால் நானும் அவரின் ரசிகையாக மாறிவிட்டேன். எங்கள் வீட்டில் அனைவரும் கமல் ரசிகர்கள் என்பதால் தான், 'திவ்யா' என்ற என் நிஜப்பெயரை 'அபிராமி' என்று மாற்ற சொன்னார்கள் என் வீட்டினர்.
எனக்கு கமல் சாரின் பயோகிராஃபியும் ரொம்பவே பிடிக்கும். கமல் சார் உடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்". இவ்வாறு நடிகை அபிராமி கூறியிருந்தார்.