திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனைத் தொடர்ந்து அவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று அசத்தலாக நடிக்கக் கூடியவர். இவரது படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா எட்டு வயது இருக்கும் போதே ராஜேஷ் இறந்து விட்டார். மேலும் ராஜேஷ் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.