மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாள் ஸ்பெஷல்: முத்தத்துடன் காதலை ஏற்று கொண்ட அமலா பால்... வைரலாகும் புகைப்படம்!!
தமிழில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால்.அதனை தொடர்ந்து தலைவா,மைனா, தெய்வத்திருமகள்,ஆடை, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
அமலா பால் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது காதலன் காதலை வெளிப்படுத்த அதனை முத்தத்துடன் ஏற்று கொண்டார் அமலா பால். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமண தேதியை விரைவில் அறிவிக்குமாறு கமெண்ட் செய்து வருகின்றனர்.