ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
தமிழ்நாடா? வடநாடா? காரில் வந்த குடும்பத்தை விரட்டி மிரட்டிய இளைஞர்கள்.. வழிப்பறி முயற்சி.. பகீர் வீடியோ வைரல்.!

வடமாநிலங்களில் நடந்த சம்பவங்களைப்போல, தற்போது தமிழ்நாட்டிலும் சில கொடூர செயல்கள் அரங்கேற தொடங்கிவிட்டன.
சென்னையில் உள்ள மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவி. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். வார இறுதி விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தவர், பின் மீண்டும் திண்டுக்கல் நோக்கி நேற்று காரில் பயணம் செய்தார்.
இதையும் படிங்க: 3 மாதத்துக்குள் ஓய்வு.. சமூக அறிவியல் ஆசிரியரின் ஆபாச பேச்சால் வழக்கில் சிக்கித் தவிப்பு.!
காரை நிறுத்த மிரட்டல்
காரில் சஞ்சீவியின் மனைவி, குழந்தைகள் இருந்தனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர், கெடிலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காரில் வந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் கும்பல், காரை நிறுத்துமாறு சண்டையிட்டுள்ளது.
கொள்ளை & வழிப்பறி முயற்சி
இளைஞர் கும்பல் கத்தியை காண்பித்து மிரட்டல் விடுத்த நிலையில், பதறிப்போன குடும்பத்தினர் நிகழ்வை வீடியோ எடுத்தபடி 5 கிமீ தூரம் பயணம் செய்தனர். மேலும், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவிகேட்டனர். சஞ்சீவ் காரை துரத்தி வந்த கும்பல், காரின் கண்ணாடி உடைத்து பொருட்களை கொள்ளையடிக்க முயற்சித்தது.
குற்றங்கள் தொடருகிறது
ஆனால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வந்ததால், கும்பல் அப்படியே சென்றுவிட்டது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரில் செல்லும் மக்களை குறிவைத்து இவ்வாறான குற்றங்கள் தொடருவதாக கூறப்படுகிறது.
காரில் பட்டப்பகலில் செல்லும் மக்களுக்கே இந்நிலைமை என்றால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்புவோரின் நிலைமை எப்படி? எனவும் கேள்வி எழுந்துள்ளது.
#JustNow || நெடுஞ்சாலையில் காரில் சென்ற குடும்பத்தினரிடம் அடாவடி..! காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள்#Polimer | #Kallakurichi | #Car | #Police | #Investigation pic.twitter.com/PLQGtSE68S
— Polimer News (@polimernews) March 30, 2025
வீடியோ நன்றிபாலிமர் நியூஸ்
இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை: காவு வாங்க காத்திருக்கும் மின்சார கம்பிகள்; உயிரிழப்புக்கு முன் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்? எதிர்பார்ப்பில் மக்கள்.!