ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை; சென்னையில் பரபரப்பு.!

அழுகிய நிலையில் வழக்கறிஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள விருகம்பாக்கம், கணபதி நகர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கவல்த்துறைனருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: #Breaking: சிஎஸ்கே தோல்வியை கிண்டல் செய்த இளைஞர் கொலை விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.. பகீர் தகவல் அம்பலம்.!
அழுகிய உடல்
அப்போது, இளைஞர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரின் தலை, முகத்தில் வெட்டுக்காயமும் இருந்தது. இதனால் இளைஞரை யாரேனும் கொலை செய்திருக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
கொலை உறுதி
மேலும், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், உயிரிழந்தது வேளச்சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பது உறுதியானது. வழக்கறிஞரான வெங்கடேஷை கொலை செய்தது யார்? என விசாரணை நடந்து வருகிறது.
காவல்துறை விசாரணை
சேதுபதி என்ற நபருடன் வெங்கடேஷ், கடந்த 4 மாதங்களாக வீட்டில் தங்கி இருந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வீடு மூடப்பட்டு இருந்த நிலையில், வெங்கடேஷ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா? பழிவாங்க கொலை நடந்ததா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வெங்கடேஷின் நண்பர்கள் இருவரை, அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர். மேலும், கார்த்திக் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக - தவெக இடையே போட்டி.. விஜய் பேச்சுக்கு இபிஎஸ் பதில் என்ன? பேட்டி உள்ளே.!