மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கவுண்டமணி தான் என் வாழ்க்கையை நாசமாக்கினார்" பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த நடிகை..
தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக பிரபலமான நடிகராக இருப்பவர் கவுண்டமணி. இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நட்சத்திரமாக நடித்துமக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தனது நகைச்சுவை திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்று இன்று வரை மக்களின் மனதில் அழியாத காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் கவுண்டமணி. கவுண்டமணி, செந்தில் ஜோடி என்றாலே திரைப்படம் வெற்றிபெறும் என்று அன்றைய இயக்குனர்கள் கருதி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டமணி நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, தங்கம், அண்ணன், மாமன் மகள், நாட்டாமை, முறை மாமன் போன்ற பல திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளன.
தற்போது கவுண்டமணியுடன் நடித்த துணை நடிகையான ஷர்மிலி கவுண்டமணியை குறித்து பரபரப்பான தகவலை இணையதளத்தில் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, "கவுண்டமணி அவரை தவிர வேறு யாருடன் நடிக்க விடமாட்டார். அப்படி நடித்தால் பட வாய்ப்பு இல்லாமல் பண்ணி விடுவார். இந்த மாதிரி தான் என் சினிமா வாழ்க்கையை கவுண்டமணி நாசம் செய்து விட்டார்" என்று பரபரப்புடன் பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.