பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அழகில் அம்மாவை மிஞ்சிய நடிகை தேவதர்ஷினியின் மகள்!! வைரலாகும் அசத்தலான போட்டோஸ்..
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையான பேச்சாலும், கலகலப்பான நடிப்பாலும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்படுபவர் நடிகை தேவதர்ஷினி. இவர் கனவுகள் இலவசம், மர்ம தேசம் போன்ற தொடர்களில் நடித்து நடிகையாக பிரபலமானார்.மேலும் தமிழில் வெளிவந்த ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய துணைகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பார்த்திபன் கனவு, காக்க காக்க, எனக்கு 20 உனக்கு 18, சரவணா, காதல் கிறுக்கன் , காஞ்சனா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியுள்ளார். தேவதர்ஷினி நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நியதி, கதம்பி என்ற இரு மகள்கள் உள்ளனர். நியதி 96 படத்தில் தேவதர்ஷினி சிறு வயது பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தேவதர்ஷினி தனது மகளின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.