மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மன அழுத்தத்தை குறைக்க இதுதான் சரியான வழி! நான் அதுக்கு அடிமையாகிட்டேன்! நடிகை இலியானா அட்வைஸ்!
தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் அவர் தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், கொரோனோ பிரச்சினை கொஞ்ச நாளைக்கு இருக்கும். பின்னர் விரைவில் சகஜமாகி விடும் என நினைத்தேன். ஆனால் இப்படி மாதக்கணக்கில் நீளும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. எனது குடும்பத்தினர் எல்லோரும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றனர். எனது அம்மா அமெரிக்காவில் இருக்கிறார்.
நான் என் குடும்பத்தை பிரிந்து தனியாக இருக்கிறேன். இதுவே எனக்கு பெரிய மன அழுத்தத்தை தந்தது. ஆனால் தற்போது நான் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடித்து வருகிறேன். நாள் தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். இதனால் எனது மனம் அமைதியாக இருக்கிறது. கொரோனோ ஊரடங்கில் வீட்டில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சியே சரியான வழி.நான் உடற்பயிற்சிக்கு அடிமையாகிவிட்டேன் என கூறியுள்ளார்.