மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மிஸ் யூ அப்பா" - தந்தையின் பிரிவை நினைத்து வாடும் பிரபல தமிழ் நடிகை..!
பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. இவர் பல திரைப்படத்திலும் நடித்துள்ளார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.
பின் ஜீவாவின் நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து கோ, சிங்கம், மௌனகுரு, கௌரவம், இரும்புக்குதிரை, கலகலப்பு 2 போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். நடன இயக்குனரான சாண்டியை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனிப்பட்ட பிரச்சனையால் இருவரும் பிரிந்தனர்.
சாண்டியை பிரிந்த காஜல் தற்போது வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது தந்தையின் நினைவு நாளில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.