ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
பிரபல தமிழ் நடிகை வீட்டில் திடீரென பிடித்த தீ.. விளக்கு ஏற்றும்போது கவனமாக இருங்க மக்களே..!

சென்னையில் உள்ள ஆரியபுரம் பகுதியில், பிரபல தமிழ் நடிகை கனகாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இருந்து நேற்று மாலை நேரத்தில் திடீரென கரும்புகை வெளியே வந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றியபோது அருகேயிருந்த துணிகளில் தீ பற்றி எரிய தொடங்கியது உறுதியானது.