மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசியலில் விஜய்.! என் ஆதரவு எப்போதும் உண்டு.! பிரபல நடிகை மகிழ்ச்சி.!
தமிழ் சினிமாவில் கயல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. முதல் படத்திலேயே அவர் தனது நடிப்பால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனை தொடர்ந்து நடிகை ஆனந்தி சண்டி வீரன், பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, கமலி ஃப்ரம் நடுக்காவேரி, கஸ்டடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கயல் ஆனந்தி
இந்நிலையில் அவர் அண்மையில் திருச்சியில் அழகு நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், நல்ல திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் குறைந்த அளவிலேயே படங்களையே ஒத்துக் கொள்கிறேன்.
என் ஆதரவு விஜய் சாருக்கு உண்டு
இன்றைய தலைமுறையினர் சிலர் சமூக வலைதளங்களில் தவறான ரீல்ஸ்களை வெளியிட்டு சிக்கி கொள்வது குறித்த கேள்விக்கு, நான் சமூக வலைதளங்களை பெரிதாக பயன்படுத்துவது கிடையாது. எந்த விஷயத்தை செய்வதற்கு முன்பும் யோசித்து சரியானவற்றை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என ஒரு நடிகர் அரசியலுக்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது ஆதரவு கண்டிப்பாக விஜய் சாருக்கு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்யின் தவெக கட்சியில் இணைய தயார்.! பிரபல நடிகர் அறிவிப்பு.! தளபதி அழைப்பாரா??
இதையும் படிங்க: என்னங்கையா இது... அந்த ஆசைக்கு விஜய்யை பயன்படுத்துகிறார் த்ரிஷா.!! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா.!!