மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வரும் நடிகை லைலா... உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தமிழில் கேப்டன் விஜகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆனவர் நடிகை லைலா. தொடர்ந்து தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் லைலா.
மேலும் ஏராளமான ஹிட் படங்களில் நடித்த அவர் கண்ணகுழியழகி, சிரிப்பழகி என ரசிகர்களால் புகழப்பட்டார். அதனை தொடர்ந்து லைலா 2006-ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகினார்.
இந்நிலையில் 16 ஆண்டு கால இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார். இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை லைலா நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.