மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. வீடு கட்டி பால் காய்ச்சிய பிரபல தமிழ் நடிகை..! எந்த ஊரில் தெரியுமா?.. தீயாய் பரவும் புகைப்படம்..!!
கோலிவுட்டில் அட்டகத்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை நந்திதா. இவர் இதனை தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி, உப்பு கருவாடு போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இறுதியாக செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, ஐபிசி 376 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் தனது சொந்த ஊரான பெங்களூரில் புது வீடுகட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார்.
இந்த புதுமனை புகுவிழாவில் தனக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்த நந்திதா, தனது வீட்டில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.