மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஹீரோ கதையில் மரியான் பட நடிகை? வெளியான தகவல்.!
தமிழ் சினிமாவில் இயக்குனர் சசியின் இயக்கத்தில் வெளியான பூ படத்தின் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனையடுத்து நடிகை பார்வதி சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இதனையடுத்து இதற்கு விளக்கமளித்த அவர், 'நான் எந்த சூப்பர் ஹீரோ படத்திலும் நடிக்கவில்லை. தவறான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன' என அவர் விளக்கம் அளித்துள்ளார்.