மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூஜா ஹெக்டேவின் மனதை கலங்கடித்த "அந்த மனிதர்".. யார் அவர்?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் "முகமூடி". இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருப்பார். இப்படம் அவருக்கு அந்தளவு கைக்கொடுக்கவில்லை.
தமிழில் இவருக்கு பெரிய மார்க்கெட் இல்லாத காரணத்தால், தெலுங்கு படங்களுக்கு நடிக்க சென்ற பூஜா ஹெக்டே எதிர்பாராத வெற்றியைப் பெற்றார். இதன் பிறகு அவருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் கிடைத்தது.
இவரது "புட்ட பொம்மா" பாடல் தென்னிந்திய சினிமாவிலேயே மிகவும் சூப்பர்ஹிட்டான நிலையில், தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். இந்த நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் "This Human" என்று எழுதி ஒருவருடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் யாருப்பா அது புதுசா? என கேள்வி கேட்டு வருகின்றனர். அவர் யார் என்பதை பூஜா விரைவில் கூறுவார் என எதிர்பார்க்கபடுகிறது.