#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடிதூள்.. செம ஜாக்பாட்தான்! தலைவரின் 169வது படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் பட நடிகை! யார்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இதில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் 169வது படமான இதில் நடிகை பிரியங்கா மோகனும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த படத்தில் பிரியங்கா மோகன் ரஜினியின் மகளாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த டான் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. குறுகிய காலத்திலேயே பிரியங்கா மோகன் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.