மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமந்தாவின் இடத்தை பிடித்த முன்னணி நாயகி.! பிரபல நடிகரின் படத்தில் குத்தாட்டம்.!
மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கிங் ஆப் கோதா. இந்தத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இப்படத்தை இயக்குவதன் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்குனராக அவதாரமெடுக்கிறார்.
இப்படத்தில் ஒரு சிறப்பான பாடலுக்கு மட்டும் ரித்திகா சிங் ஆடியுள்ளார். ரித்திகா சிங் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, பாக்ஸர், ஓ மை கடவுளே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த பாடலுக்கு முதலில் சமந்தாவைதான் ஆட வைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபநாட்களாக அவர் மியோசிடிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்ததால், அவரை மாற்றி அவருக்கு பதிலாக ரித்திகா சிங்கை ஆட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.