புது வீடு வாங்கும் நடிகை சமந்தா... எங்கு, எந்த இடத்தில் தெரியுமா..‌‌. விலையை கேட்ட ஷாக் ஆகிடுவீங்க..‌.



Actress Samantha buy a new house in Mumbai beach side

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது சமந்தா  கைவசம் சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்கள் உள்ளன. இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய விவாகரத்து ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

samantha

இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது புது வீடு வாங்க இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. மும்பையில் கடற்கரையினை ஒட்டி தான் அவர் வீடு வாங்குகிறார் என சொல்லப்படுகிறது. அதன் விலை மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல் பரவி வருகிறது.